நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார் எவ்வளவு வேலை, இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம்.அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது அவரும் எப்போதும் சரியாக இருப்பார்.

எனக்கு முதலில் இருந்தே ஜி.கே பேக்டரி இருக்கும் போதே,நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே தெரியும்.அவரை தம்பி,முதலாளி,நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன். சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன். அவர் அந்த இடத்தில் நடிக்க கூடியவர். மற்ற இயக்குநர்கள் எப்படி என எனக்கு தெரியாது ஆனால் நான் உணர்ந்தேன்.

YouTube video

முதல் பாகத்தில் அதிகமாக மெனக்கிடல் செய்தேன்.இரண்டாம் பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா, மாதவன்,அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் இவருடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும். எனக்கும் விஷாலும் இது அருமையான படமாக அமையும் அப்படியொரு குழு அமைந்தது அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்.

நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி. கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. மீரா ஜாஸ்மீன் அவர் இடம்,ஹீரோ அவர் இடம்,வில்லன் இடம் இது அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.

எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.கீர்த்தி தான் சரியாக இருப்பார் என தோன்றியது. இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

அவர் இசையமைத்த இருப்பு திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார்.

பாடல் அருமையாக வந்துள்ளது.முத்துக்குமார் அவர் இப்போது இல்லை அவருக்கு நிகராக அருண்பாரதி, ஏகாதசி உள்ளனர். பிருந்தாசாரதி சூரியரும் சூரியனும் என்ற பாடலை எழுதியுள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவருடன் முதல் முறையாக பணியாற்றுகிறேன்.அவர் தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர்.

தென்னவன் சார்,சண்முகம் சார் இன்னும் நாலு பாகம் எடுத்தாலும் உடன் இருப்பார்கள். சக்தி ரன் படத்தில் ஜீவா சாரின் கடைசி அசிஸ்டன்ட். இந்த படத்தின் வளர்ச்சி அவரை சேரும். 800 பேர் கூட்டத்திலேயே படம் எடுக்கும் விதமாக இருந்தது.

பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம். ராஜ் கிரன் சார் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமை கொண்டுள்ளேன்