செய்தி வாசிப்பாளர் கண்மணி நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Reader Kanmani in Not Reachable : தமிழ் சின்னத்திரை சன் டிவி செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் கண்மணி சேகர். சமீபத்தில் இவர் கட்டா என செய்தி வாசிக்கும் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட க்யூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஏற்கனவே கண்மணி சேகருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் இந்த வீடியோவின் மூலம் இன்னும் அதிகமானது. ‌‌ இவர் தற்போது Not Reachable என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்துள்ள திரைப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் டேவிட் இந்த படத்தில் நடித்துள்ளார்.

மேலும் காதல் சரவணன் இந்த படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். மற்றவர்கள் அனைவருமே அறிமுக நடிகர் நடிகைகள் தான். இருப்பினும் படத்திற்காக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த படத்திற்கு நிதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய சரண் குமார் இசை அமைத்துள்ளார். சந்துரு முருகானந்தம் என்பவர் படத்தின் எடிட்டிங் மற்றும் vfx பணிகளை கவனித்துள்ளார். மேலும் இந்த படத்தினை இயக்கி இருப்பவரும் இவர் தான்‌.

எம் கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் மகாலட்சுமி இந்த படத்தினை தயாரித்துள்ளார்.

ஒரு பெண் கால் டாக்ஸி வீட்டிற்கு செல்லும்போது அவர் காணாமல் போய்விடுகிறார். அப்போது அவர் காவலன் SOS App-ஐ பயன்படுத்துகிறார். இதன் மூலம் அவருடைய தகவல்கள் போலீஸ்க்கு கிடைக்கிறது.

அந்த தகவல்களை வைத்து அந்த பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? அந்தப் பெண்ணை கடத்த காரணம் என்ன? அவரை கடத்தியது யார் யார்? என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

செய்திவாசிப்பாளர் கண்மணி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதோ அந்த டீசர்

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.