
90ஸ் கிட்ஸ் செய்தி வாசிப்பாளர் ரத்னாவை மடக்கி பிடித்து இளைஞர்கள் ரோட்டில் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
90களில் திரைப்படம் விமர்சனங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளராக சன் டிவியில் பணியாற்றிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ரத்னா. இதற்கு முன்னதாக பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தாலும் சன் டிவி தான் இவருக்கென ஒரு அடையாளத்தை கொடுத்தது.

தற்போது செய்தி வாசிப்பாளர், பிசினஸ் என எல்லாத்தையும் கவனித்துக் கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஒரு பழைய போட்டோவை வெளியிட்டு 1995 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார்.
சூட்டிங் முடித்துவிட்டு கோடம்பாக்கம் வழியாக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது 25 வயது இளைஞர் ஒருவர் தன்னை வழிமறித்து நீங்கள் சன் டிவி ரத்னா தானே என்று கேட்க நானும் ஆமாம் என்று சொல்ல அவன் எனக்கு உங்களை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான். நான் நோ சான்ஸ் ஐ அம் ஆல்ரெடி மேரிட் என சொன்னேன்.
உடனே அந்த இளைஞன் ஓ அப்படியா, சரி உங்களுக்கு தங்கச்சி இருக்கா என்ன கேள்வி கேட்க நான் வெலவெலத்து போனேன், உடனடியாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டேன். இந்த புடவையை கட்டும் போதெல்லாம் அந்த இளைஞனும் ரோட்டில் நடந்த சம்பவம் தான் நினைவிற்கு வரும் என முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
