நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியின் லேட்டஸ்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவுடன் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் வரலட்சுமி. இவர் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் ஆவார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சற்று குண்டாக இருக்கும் இவர் தற்போது உடல் எடை குறைத்துக் கொண்டு ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது உடல் எடை குறைத்த பின் வரலட்சுமி சிறியதான மாடர்ன் உடையில் அழகாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்து இருக்கிறார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு இந்த மாற்றம் குறித்து அவர், ”மாற்றம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.உங்களை முதலில் நம்புங்கள். உங்களால் என்ன செய்ய முடியும், முடியாது என்று மற்றவர்கள் சொல்ல தேவையில்லை. நம்பிக்கை தான் சிறந்த ஆயுதம். உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள்.உங்களுக்கு சிறந்த போட்டி நீங்கள் தான். உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று ஆச்சரியப்படுவீர்கள். நம்புங்கள்” என பதிவுட்டுள்ளார்.