தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்துடன் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்.கே.சுரேஷின் வடசென்னை, விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் மோத உள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த தீபாவளி ரேஸில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நடோடிகள் 2 படமும் இணைந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.