இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை படத்தின் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புதிய தகவல் ஒன்று அறிவித்துள்ளது.

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது ‘விடுதலை’ திரைப்படத்தை தீவிரமாக இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகனாக பிரபல காமெடி நடிகராக வலம் வரும் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் தியேட்டர் உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சமீபத்தில் பெற்றுள்ளது. இதை அடுத்து இப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வரும் நிலையில் மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என புதிய தகவலுடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.