ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

Nelson Plan on Jailer 2 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இதனை தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இதற‌்கான கதையை உருவாக்கும் வேலையில் நெல்சன் தீயாக இறங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அனிமல் பட ஹீரோ ரன்பீர் கபூரை நடிக்க வைக்க ப்ளான் போட்டு இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் ஜெயிலர் 2 தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.