பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் நெல்லை சிவா காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது.

Nellai Siva Passes Away : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் நெல்லை சிவா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று மாலை 6 மணிக்கு காலமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய இறுதி ஊர்வலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பணகுடியில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நல்ல சிவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.