Thala 59 Nazriya

Thala 59 Nazriya :

தல 59 படத்தில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி பானு ஆகியோர் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது.

இந்த படத்தில் டாப்சீ வேடத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளார். நஸ்ரியாவுக்கு ஜோடியாக திரிஷா இல்லனா நயன்தாரா, AAA ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தல அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.