கணவனுடன் இணைந்து சைக்கிள் ரைடு சென்ற நசரியாவின் அழகான வீடியோ பதிவு.

மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நிவின்பாலியுடன் இணைந்து ‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். ஆனாலும் பல ரசிகர்களின் மனதில் எக்ஸ்பிரஷன் குயின் ஆக வலம் வந்த இவர் பிரபல மலையாள நடிகரான பகத் பாஸில் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட நஸ்ரியா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் “அடடே சுந்தரா” என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நஸ்ரியா தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

அவர் வெளியிட்ட வீடியோவில் தனது கணவனான பகத் பாசிலுடன் இணைந்து தனித்தனியாக சைக்கிளில் ஊர் சுற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த அழகான வீடியோ ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.