விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா போட்ட பதிவு..!
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

Nayanthara’s post wishing Vijay on his birthday
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இன்று விஜய்க்கு 51ஆவது பிறந்தநாள் என்பதால் ஜனநாயகன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக் குழு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.அதில் அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும் ஜனநாயகனுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Happiest Birthday dearest #Thalapathy @actorvijay 🎂Have a great Year ahead😇 Best wishes for #JanaNayagan 👍
— Nayanthara✨ (@NayantharaU) June 21, 2025