Nayanthara With AJith

Nayanthara With Ajith : விஸ்வாசம் கெட்டப்பில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆனால் இதுநாள் வரை அஜித்தின் லுக்குகள் மட்டுமே வெளியாகி வந்தன.

நயன்தாராவின் விஸ்வாசம் கெட்டப் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நயன்தாரா அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தின் மூலம் நயன்தாரா இளமையான அஜித்திற்கு மனைவியாக நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here