nayanthara starrer test movie direct ott release on netflix
nayanthara starrer test movie direct ott release on netflix

நாட்டில் ஆடும் எத்தனையோ ஆட்டங்களில் கிரிக்கெட் போல வருமா? என்பது போல.. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்திருக்கிறது. இதனால், கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாக கொண்டு, சினிமாவில் வியாபார ஆட்டம் போடுவதும் இயல்பாயிற்று.

கிரிக்கெட்டை மையமாக வைத்து சில படங்கள் வந்தாலும் செமையாக வெற்றி பெற்றுள்ளன.அவற்றில், சென்னை 28 தொடங்கி.. ஜீவா, எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி, கனா என குறிப்பிடலாம்.

இந்த பட்டியலில், லேட்டஸ்டாக ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த ‘லப்பர் பந்து’ திரைப்படமும் இணைந்தது. அப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்த நிலையில், லப்பர் பந்து பாணியில் இரண்டு ஹீரோக்களை வைத்து மற்றொரு கிரிக்கெட் படம் தமிழில் உருவாகி இருக்கிறது. அப்படத்தின் பெயர் ‘டெஸ்ட்’. இதில் சித்தார்த் மற்றும் மாதவன் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் நடிகை நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இதுதவிர நடிகை மீரா ஜாஸ்மினும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘டெஸ்ட்’ திரைப்படத்தை சசிகாந்த் இயக்கி உள்ளார்.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சசிகாந்த், தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, ஜெகமே தந்திரம் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். இவர் ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் பாடகி ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். டெஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, டெஸ்ட் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதில்லை என்றும் அப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

இதற்கு முன்னர் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், ஓ2 போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது டெஸ்ட் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

சினிமாத் துறையில் நயன் எழுதாத டெஸ்டா.? அதெல்லாம் பாஸாகிருவாங்க..

xr:d:DAFz66TLaa0:22,j:1809730105780218224,t:23111209