மீண்டும் ராஜா ராணி இணைந்து நடித்துள்ள அன்னபூரணி படத்திற்காக நயன்தாரா சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக டிசம்பர் ஒன்றாம் தேதி அன்னபூரணி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 

சங்கரின் உதவி இயக்குனர் தினேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்த ஜெய், சத்யராஜ் ஆகியோர் மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.