
இனிமே அஜித்துடன் நடிக்க மாட்டேன் என டாப் நடிகை ஒருவர் சபதம் எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்த நிலையில் விக்னேஷ் சிவன் திடீரென படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் நயன்தாரா அதிருப்தி அடைந்த நிலையில் இதுகுறித்து தன்னால் முடிந்த அளவுக்கு பேச்சு வார்த்தைகள் நடத்தினார். ஆனாலும் அஜித் மனம் மாறாத காரணத்தால் நயன்தாரா இனி அவருடன் நடிக்க போவதில்லை என சபதம் எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இப்படியான நிலையில் அஜித் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ஹார்ட்டின் சிம்பிளை அள்ளி கொடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்துள்ளதால் நயன்தாரா குறித்த இந்த தகவல்கள் உண்மை தானா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது.