இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ளனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என புகழ் பெற்றவர் நடிகை நயன்தாரா. பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரட்டைக் குழந்தைக்கு அப்பா அம்மாவான விக்னேஷ் சிவன்.. குழந்தைகளின் புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு

திருமணம் முடிந்த சில மாதங்களே ஆன நிலையில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. அதே சமயம் நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நானும் நயனும் அப்பா அம்மாவாகி விட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக புகைப்படத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

இரட்டைக் குழந்தைக்கு அப்பா அம்மாவான விக்னேஷ் சிவன்.. குழந்தைகளின் புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவர்களது இந்த அறிவிப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.