![images (96)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-96-1.jpeg)
திருநங்கையாக மாறியுள்ளார் பிரபல நடிகர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா, சிம்ரன் நடித்திருந்தனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-95-3.jpeg)
மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார். திறமை வாய்ந்த நடிகரான இவர் தொடர்ந்து விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நவாசுதீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். Haddi திரைப்படத்தில் தான் அவர் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-97-3.jpeg)
இது குறித்த புகைப்படங்கள் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.