Natpe Thunai

Natpe Thunai : ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த பட தலைப்பு நட்பே துணை என வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி.

இவர் மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதனையடுத்து இவருடைய இரண்டாவது படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் நட்பே துணை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் ஆதி நடிக்க உள்ள இந்த படத்தை சுந்தர் சி-யின் அவினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோமோ வீடியோ இதோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.