Natpe Thunai Box Office Collection
Natpe Thunai Box Office Collection

Natpe Thunai Box Office Collection – ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெள்ளியான படம் நட்பே துணை.

மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றுள்ளது.  தமிழகத்தில் முதல்நாளில் மட்டும் மூன்று கோடி வரை இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில் சென்னையில் மட்டுமே 34 லட்சம் வரை இப்படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக ஹிப்ஹாப் ஆதி உருவெடுத்துள்ளார்.

மேலும் இந்த வாரம் வெளியான மற்ற இரண்டு படங்களை விடவும் நட்பே துணை படத்துக்கே அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் அதனால் வரும் நாட்களிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என்றும் சொல்லப்படுகிறது.