Narendhira Modi & Gaja

Narendhira Modi & Gaja :

கடந்த 12 ஆம் தேதி வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக , புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, உடனடியாக இந்த புயல் பாதிப்பினால் உயிரிழப்பு எதும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்குமாறு பல்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவின் படி, அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், புயல் தொடர்பாக அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக , புயலின் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் , கஜா புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் புயல் பாதித்த இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், புயல் குறித்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விவரமாக கேட்டறிந்தார்.