சன் டிவி தொகுப்பாளினி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
Nakshatra Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல் சன் டிவி. சன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் நட்சத்திரா.
மேலும் இவர் ஆல்பம் பாடல்கள் பலவற்றில் நாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அஸ்வினுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் நட்சத்திரா தன்னுடைய காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்