நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் நானே வருவேன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் வில்லனாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றிருந்தாலும் பிரபு என்ற சாதுவான நபராகவும் கதிர் என்ற கொடூரமான வில்லனாகவும் தனுஷ் இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் தனுஷ் உடன் இணைந்து இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க இந்த படத்தில் ஜெர்மன் நாட்டு நடிகை எல்லி அவ்ர்ராம், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடித்தளத்தில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.