நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் டீசர் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் இடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “நானே வருவேன்”. இப்படத்தை அவரது சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் தனுஷின் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நானே வருவேன் திரைப்படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இப்படத்தின் டீசர் வரும் 15 அல்லது 16 தேதிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ரிலீஸ் தேதியோடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.