நானே வருவேன் திரைப்படத்திலிருந்து இரண்டு வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் தனுஷின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தயாராக இருக்கும் திரைப்படம் தான் “நானே வருவேன்’. இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இரண்டு வித்தியாசமான தோற்றத்துடன் வெளியானது நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர்!! - உற்சாகத்தில் ரசிகர்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்க யோகி பாபு மற்றும் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இரண்டு வித்தியாசமான தோற்றத்துடன் வெளியானது நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர்!! - உற்சாகத்தில் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்றை கலைப்புலி எஸ் தானு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அப்போஸ்டரில் நடிகர் தனுசின் இரண்டு வித்தியாசமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.