தனுஷின் நானே வருவேன் படத்தின் முக்கிய அறிவிப்பை கலைபுலி எஸ் தானு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் இடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “நானே வருவேன்”. இப்படத்தை அவரது சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் தனுஷின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நானே வருவேன் திரைப்படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இப்படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தானு அவர்கள் அறிவித்துள்ளார். அதில் அவர் உங்கள் நெஞ்சை வருடவரும் இசை! நானே வருவேன் திரைப்படத்தின் முதல் லிரிக்ஸ் வீடியோ 7/9/22 அன்று மாலை 4:40க்கு வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்திருக்கிறார். இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.