நான் மிருகமாய் மாற படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் சத்திய சிவா என்பவர் இயக்கத்தில் சசிகுமார் ஹரிப்ரியா விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நான் மிருகமாய் மாற.

நான் மிருகமாய் மாற.. படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.!!

நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வெளியான இந்த படத்தின் கதைக்களம் என்ன? நடிகர் நடிகைகளின் நடிப்பு பற்றி பார்க்கலாம்.

கதைக்களம் ‌:

தனது தம்பியை கொன்றவனை பழி வாங்க போகும் சசிகுமார் அங்கே எதிரிகளின் கூலிப்படை கும்பலில் சிக்கிக் கொள்கிறார். பிறகு என்னவானது சசிகுமார் தனது தம்பியை கொன்றவனை பழி வாங்கினாரா? அவர்களிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

ஒத்த ஆளாக மொத்த படையத்தையும் தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு சசிகுமாரிடமே இருந்துள்ளது. அவரும் அதற்கு ஏற்றார் போல ஆக்ஷனில் அதிர வைத்துள்ளார். ஆக்ரோஷம், பரிதவிப்பு குடும்ப பொறுப்பு என அனைத்து விதமான எமோஷன்களையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

விக்ராந்த் அவ போது வில்லனாக காட்சிகளில் வந்தாலும் முடிந்த அளவிற்கு நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இரவு நேர காட்சிகளுக்கு இசைதான் உயிர் கொடுத்துள்ளது.

நான் மிருகமாய் மாற.. படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்.!!

ஒளிப்பதிவு அருமை, எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்குனர் சத்திய சிவா பழைய பழிவாங்கும் கதையை கையில் எடுத்திருந்தாலும் அதை சுவாரசியமாகவும் த்ரில்லராகவும் கொண்டு சென்றுள்ளார்.