விஜய்யின் ‘நா ரெடி’ பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலாக “நா ரெடிதான் வரவா” என்ற பாடல் சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ பாடல், வெளியாகி தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.