நடிகர் சிவகார்த்திகேயனை ரஜினியோட ஒப்பிட்டு பேசியுள்ளார் மிஷ்கின்.

தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக மாவீரன் என்ற திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

அதிதி சங்கர் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார். படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்ட மிஷ்கின் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றியும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசினார்.

அப்போது நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயன் அப்படியே ரஜினி மாதிரியே அடக்கமானவர் என அடிக்கடி சொல்லுவார். ஆனால் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மாதிரி கிடையாது. ரஜினியே தான் என ஓப்பனாக பேசியுள்ளார்.

அடுத்த ரஜினி அஜித்தா? விஜய்யா? என ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் மிஷ்கின் சிவகார்த்திகேயனை ரஜினி தான் என கூறி இருப்பது சமூக வலைதள பக்கங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.