Mysskin About Youth Movie
தளபதி விஜய் படத்தில் மிஸ்கின் செய்த கோல்மால் வேலை குறித்து அவரே பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Mysskin About Youth Movie : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக மிஸ்கின் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் இணை இயக்குனராக இருந்த போது விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் இடம் பெற்றிருந்த ஆல்தோட்ட பூபதி பாடலில் வாலி வரிகளுக்கு பதிலாக கபிலனின் வரிகளை மாற்றி பதிவு செய்ததை பற்றி கூறியுள்ளார்.