விஜயின் ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோ இன்று மாலை வெளியாக போவதால் இது குறித்து மகிழ்ச்சியான பதிவை இசையமைப்பாளர் தமன் பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி ஆக வளம் வருபவர் தான் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “ரஞ்சிதமே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ கடந்த நவம்பர் 3ஆம் தேதியான வியாழக்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது.

தற்போது இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோ இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். தற்போது இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று தான் எனக்கு தீபாவளி, பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் என கூறி விஜய் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் பதிவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.