இசையமைப்பாளர் தமன் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கடைசியாக தமிழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையாடுத்து பல படங்களில் இசையமைத்து வரும் இவர் மகேஷ்பாபுவின் குண்டூர் கரம் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஸ்டூடியோ அருகில் இலவசமாக மோர் கடையை தொடங்குகிறேன், வயிறு எரிச்சலுடன் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் தருகிறேன். தயவுசெய்து குணமடையுங்கள். நிறைய வேலைகள் இருக்கிறது எனது நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை”. என்று பதிவின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.