ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து, சர்ச்சை..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத் துறை, இனி இசைக்​கலைஞர்​கள் மற்​றும் இயக்​குநர்​களின் கைகளில் இல்​லை. கார்ப்​பரேட் கைகளில் உள்​ளது.

படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் இப்​போது முடி​வெடுக்​கும் அதி​காரம் இருப்​ப​தால் பாகு​பாடு நில​வு​கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்​காததற்கு மதரீதி​யான விஷய​மும் காரண​மாக இருக்கலாம். இது என் முகத்​துக்கு நேராக நடக்​க​வில்லை என்​றாலும், அது​ போன்ற விஷ​யங்​களைக் கேள்​விப்​படு​கிறேன். எனக்​குக் கிடைக்​கும் வாய்ப்​பு​களில் நான் மகிழ்ச்​சி​யடைகிறேன்.

தென்​னிந்​தி​யா​வில் இருந்து இந்​திக்​குச் சென்று நிலைத்து நின்ற முதல் இசையமைப்​பாளர் நான்​தான். இளையராஜா அங்கு சில படங்​களுக்கு இசை அமைத்​துள்​ளார். என்னை அவர்​கள் ஏற்றுக்​கொண்​டது திருப்​தி​யான அனுபமாக இருந்​தது. மணிரத்​னத்​தின் ‘ரோஜா’ (1992), ‘பம்​பாய்’ (1995), ‘தில் சே’ (1998) படங்​களுக்கு அமைத்த இசை பிரபலமா​னாலும், சுபாஷ் காய்​யின் ‘தால்’ (1999) படம்​தான் என்னை வட இந்​தி​யா​வில் பட்​டிதொட்​டி​யெங்​கும் அறிய வைத்​தது.

நான் ஒரு​போதும் இந்தி பேசி​ய​தில்​லை. தமிழுடன் எங்​களுக்கு அப்​படி ஒரு பிணைப்பு இருக்​கிறது. ஆனால் அப்​போது சுபாஷ் கய், ‘உங்​கள் இசை எனக்கு மிக​வும் பிடிக்​கும், நீங்​கள் இங்கு நீண்ட காலம் நீடிக்க வேண்​டும் என்று விரும்​பு​கிறேன். அதனால் இந்தி கற்​றுக்​கொள்​ளுங்​கள்’ என்று கூறி​னார். அவரிடம் நான், இந்தி இசைக்​குத் தாயாக விளங்​கும் உருது கற்​றுக்​கொள்​கிறேன் என்​றேன். இவ்​வாறு ரகுமான் கூறி​யிருந்​தார்.

இதில் பாலிவுட்​டில் மத பாகு​பாடு இருப்​ப​தாக அவர் கூறியது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதைப் பிரபல பாடகர்​கள் ஷான், சங்​கர் மகாதேவன், ஹரிஹரன், பாடலாசிரியர் ஜாவேத் அக்​தர் உள்​ளிட்​டோர் மறுத்​துள்​ளனர்.

ஷான் கூறும்​போது, ‘இந்தி சினி​மா​வில் மத ரீதி​யான விஷயஙகள் இருப்​ப​தாக நினைக்​க​வில்​லை. கடந்த 30 ஆண்​டு​களாகச் சிறு​பான்​மை​யின​ராக இருக்​கும் நமது மூன்று (சல்​மான், ஷாருக்​கான், அமிர்​கான்) சூப்​பர் ஸ்டார்​களின் ரசிகர்​கள் அதி​கரித்​துக்​கொண்​டு​தான் இருக்​கிறார்​கள்’ என்று தெரி​வித்​துள்​ளார். பாடலாசிரியர் ஜாவேத் அக்​தர் கூறும்​போது, ‘நான் அப்​படி உணர்ந்​த​தில்​லை. மத ரீதி​யான பிரச்​சினை இருப்​ப​தாக நினைக்​க​வில்​லை’ என்​று தெரி​வித்​துள்​ளார்​. இவர்​களைப்​ போல​வே பலரும்​ தெரி​வித்​துள்​ளனர்​.

இந்துக்களின் புராண காவியமான ‘ராமாயணம்’ இசையமைப்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது; ‘நான் ஒரு இஸ்லாமியர். ஹான்ஸ் ஜிம்மர் ஒரு யூதர். ‘ராமாயணம்’ இந்து மதம் சார்ந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்திற்கு சேர்ந்து இசையமைப்பது பெருமையாக இருக்கிறது.

music director ar rahman about ramayanam movie
music director ar rahman about ramayanam movie