கதாநாயகனாக களம் இறங்குகிறாரா அனிருத்?

Web Ads

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே அனிருத் தெரிவிக்கையில், ‘நாயகனாக நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

‘லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் நாயகனாக நடியுங்கள். ஆனால், அதனை நான் எப்போதும் பண்ண மாட்டேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிய உயரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இசையில் இன்னொரு ரவுண்ட் போக வேண்டும். அதற்கு 15 வருடங்கள் போதாது.

நான் இசையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆகையால் இப்போதைக்கு இசை சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ப்ரோமோ ஆகியவற்றில் மட்டுமே தோன்றுவேன்’ என கூறியுள்ளார் அனிருத். ஜெயிலர் 2, தி பாரடைஸ், எல்.ஐ.கே, ரஜினி-கமல் இணையும் படம், ஜனநாயகன், டிசி, அரசன், ரஜினி173 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

music director anirudh next plan to hero acting
music director anirudh next plan to hero acting