Murugadoss & Vijay Combo

Murugadoss & Vijay Combo :

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர் என பெயரெடுத்தவர் முருகதாஸ். இவர் அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பல நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

தற்போது தளபதி விஜயுடன் துப்பாக்கி, கத்தி, ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சர்கார் படத்தின் மூலம் விஜயுடன் இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சர்கார் திருட்டு கதை என கிளம்பிருந்த மிக பெரிய பிரச்சனை நேற்று ஒரு வழியாக சமரச பேச்சுவார்த்தையில் முடிந்தது.

ஆனாலும் இந்த கதை திருட்டு விவகாரம் ஓரளவிற்கு உண்மை என்பது போலவே உறுதியாகி விட்டதால் முருகதாஸ் விஜய் கூட்டணி இந்த படத்துடன் முடிவுக்கு வந்து விடும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் எந்தவொரு முன்னணி நடிகரும் முருகதாஸுடன் இணைய தயக்கம் கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர்.

இதனால் முருகதாஸ் தரப்பும் முன்னணி நடிகர்களை இயக்க வாய்ப்பில்லை என்றால் புது முகங்களை வைத்து மீண்டும் தங்களுடைய திறமையை நிரூபிப்போம் என கூறியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.