Murugadoss Next

Murugadoss Next : விஜய் நடிப்பில் வெளியான அரசியல் படம் சும்மா சாம்பிள் தான்.. இதை விட பெரிய திட்டத்தை முருகதாஸ் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த சர்கார் படம் அதிமுகவை விமர்சிக்கும் படி இருந்ததால் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து இருந்தது.

ஆனால் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்த காட்சிகளில் தவறு ஏதும் இல்லை என பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் கூறி வந்தனர்.

இருப்பினும் அதிமுகவின் தொடர் போராட்டங்கள் மற்றும் கண்டனங்களால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.

முருகதாஸின் இந்த காட்சிகள் வெறும் சாம்பிள் தானாம். இதை விட பெரிய பிளானை அவர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம், அது என்னவென்றால் சர்கார் படத்தை தொடர்ந்து முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இதே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படம் சர்கார் படத்தை விட பல மடங்கு அதிகமாக அரசியலில் இறங்கி அடிக்கும் படமாக இயக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Rajini and Murugadoss