Ms Dhoni vs Rishabh Pant
Ms Dhoni vs Rishabh Pant

Ms Dhoni vs Rishabh Pant – டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோனியை விட ரிஷப் பந்த் அதிக சதங்கள் அடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார்.

ஆஸ்., – இந்தியா இடையே 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பராகவும், பேட்மேன்னாவும் சிறப்பாக செயல்ப்பட்டார்.

மேலும், அவர் 189 பந்துகளில் 15 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இரண்டு சதங்கள் அடித்துள்ள பந்த், டெஸ்ட் போட்டியில் தோனியை விட அதிக சட்டங்களை அடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்து உள்ளார்.

ரிஷப் பந்த் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியது : “ரிஷப் பந்த் உண்மையில் சிறந்த திறமைசாலி. மற்றும் நம்ப முடியாத வகையில் சிறந்த பால் ஸ்டிரைக்கர். சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர்.

சில சமயங்களில் அவர் சுழற்பந்துக்கு எதிராக விளையாடுவதை மற்றவர்களால் யூகிக்க கூட முடியாது.

மேலும், இவர் ஒரு சிறந்த டி-20 விளையாட்டு வீரர். சிட்னி சதத்துடன் இரண்டு சதங்களும், இரண்டு முறை 90 ரன்களுக்கு மேலும் அடித்துள்ளார்.

தற்போது ரிஷப் பந்த் 21 வயதுடையவர் என்பதினால் இந்தியாவிற்காக நீண்ட நாட்கள் விளையாட முடியும்.

மேலும், விக்கெட் கீப்பராக ஓரளவிற்கு தேர்ச்சி அடைந்து உள்ளார். ஆனால், இது போதுமானது இல்லை மேலும் பயிற்சி தேவைப்படுகிறது. நல்ல பயிற்சி பெற்றால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்.

அதே போல சிறந்த பேட்ஸ்மேனாகவும் செயல்பட முடியும். இந்தியா கிரிக்கெட்டில் தோனியை போல சிறந்த விளையாட்டு வீரராக ரிஷப் பந்த் வருவார் என்று எதிர்பார்கலாம். “ என்று கூறினார் ரிக்கி பாண்டிங்.