MS Bhaskar Family

MS Bhaskar Family : தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன், குணசித்ர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் எம்.எஸ்.பாஸ்கர்.

அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என இவர் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு கோலிவுட்டையே ஒரு வலம் வந்து விட்டார். இவருடைய மகன் ஆதித்யா பாஸ்கரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த 96 படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

ஆதித்யா நடித்தது ஒரே படம் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாவதற்கு 96 படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தற்போது ஆதித்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்பா அம்மாவின் புகைப்படங்களை பதிவிட்டு 25 வருட திருமண விழாவை கொண்டாடும் அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் தான் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியா? மிகவும் அழகான குடும்பம் என கூறி ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.