Movie Ticket Rates

Movie Tickets Rates :

சினிமா டிக்கெட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் திரைப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி நடுத்தர மக்களுக்கு பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது.

சாதாரண பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி அதிக அளவில் விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மக்களுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் .

அதே போல சினிமா டிக்கெட் மீதும் 28% வரை ஜி.எஸ்.டி வரி விதித்து இருந்தது. தற்போது இந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ 100-க்கும் குறைவான விலையில் டிக்கெட் வாங்கினால் 12% ஜி.எஸ்.டி எனவும் ரூ 100-கும் அதிகமான விலையில் டிக்கெட் வாங்கினால் 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் மற்ற பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.