2022-ல் அதிக மக்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிறு பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல்வேறு திரைப்படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது.

2022-ல் திரையரங்குகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இது தான் - வைரலாகும் லிஸ்ட்.!!

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் வெளியாகி தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களின் படங்களும் உண்டு. அதே சமயம் சிறிய பட்ஜெட்டில் அறிமுகம் இல்லாத நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படங்களும் உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் இந்த மாதத்தோடு 2022 முடிய உள்ள நிலையில் இந்த வருடத்தில் திரையரங்குகளில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த லிஸ்டில் மணிரத்தினம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

2022-ல் திரையரங்குகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இது தான் - வைரலாகும் லிஸ்ட்.!!

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடிக்க தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் மற்ற மொழி படங்களில் கேஜிஎப் 2 மற்றும் RRR உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக மக்களால் பார்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.