தனுஷ் குறித்து வெளியான சூப்பர் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.

தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்த ஆண்டு வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. அதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்த அடுத்த படங்களை கைவசம் வைத்துக் கொண்டு தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தையே கையில் வைத்திருக்கும் தனுஷ் அவர்கள் தற்போது IMDb நிறுவனம் வெளியிட்டு இருக்கும் “முதல் 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் 2022” என்ற கணக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதன் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் குளோபல் ஸ்டார் என்ற ஆஷ்டாகுடன் வைரலாகி வருகிறது.