பரதநாட்டியம் ஆடிய சுந்தரவல்லி..சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி சொன்ன ஆக்ஷனில் அசோகன் கண்டுபிடிக்காததால் சூர்யா கரெக்டாக சொல்லுகிறார் பிறகு நந்தினி பக்கம் திரும்ப நந்தினி ஒரு நாடகம் நடித்து காட்ட வேண்டும் என சொல்ல சூர்யாவும் நந்தினியும் சேர்ந்து டயலாக் பேசி அசத்துகின்றனர். மறுபடியும் பாட்டிலை சுழற்ற அது சுந்தரவல்லி பக்கம் வருகிறது அவர் நான் பண்ண மாட்டேன் என்று சொல்ல அனைவரும் பேசி சம்மதம் செய்ய வைக்கின்றனர். அதில் பரதநாட்டியம் ஆட வேண்டும் என வருகிறது. அனைவரும் கட்டாயப்படுத்த சுந்தரவள்ளியும் சூப்பராக பரதநாட்டியம் ஆடி அசத்துகிறார். அனைவரும் சுந்தரவள்ளியின் பரதநாட்டியத்தை வியந்து பார்க்கின்றனர். பிறகு சூர்யா வந்த அனைவருக்கும் நன்றியை சொல்லிவிட்டு விழாவை முடித்து அனைவருக்கும் பரிசு கொடுக்கிறார். சுந்தரவல்லி இடம் மைக் கொடுத்து சூர்யா பேச சொல்ல இந்த நாள் ரொம்ப நிறைவாக இருந்தது இதே மாதிரி வருஷம் வருஷம் கொண்டாடலாம் என் பையன் சூர்யாவுக்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்ல உடனே சூர்யா மைக் வாங்கி இந்த ஐடியா கொடுத்தது நான் இல்லை என் பொண்டாட்டி நந்தினி தான் என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார்.
இவ்வளவு நேரம் ஏன் இதை நான் சொல்லலனா சில விஷக் கிருமிகள் இந்த கேம்ம நம்ப செய்யவிடாமல் பண்ணி இருப்பாங்க என்று சொல்ல, உடனே கம்பெனி வேலையாட்கள் நந்தினியை பாராட்டி நன்றி சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி சென்றுவிட ஹாப்பி பொங்கல் என சொல்லி அனைவரையும் அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் சுரேகா துணிகளை பேக் பண்ண எங்க கிளம்பற என்று கேட்க நான் தான் காலேஜ் டூர் போறேனே என்று சொல்ல ஆமால என்று சொல்லுகிறார் எத்தனை நாள் ஆகும் என்று கேட்க பத்து நாள் ஆகும் மேல என்று சொல்ல எனக்கு தான் போர் அடிக்கும் என்று மாதவி சொல்லுகிறார் உடனே அசோகன் வந்து எனக்கு ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பால்ல செஞ்ச பால் கோவா வாங்கிட்டு வாம்மா என்று சொல்ல மாதவி திட்டி அனுப்பி விடுகிறார். ஊரிலிருந்து நான்கு பேர் வந்து திருவிழாவிற்கு வரவேற்க வந்துள்ளனர். ஹாஸ்பிடல் வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு என்று சுந்தரவல்லி கேட்க எல்லாமே சூப்பரா போயிக்கிட்டு இருக்கு என்று சொல்லா நந்தினி அனைவருக்கும் காபி கொடுக்கிறார்.
இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று வந்தவர்கள் கேட்க உடனே சூர்யா இவங்க என்னோட மனைவி சுந்தரவல்லி அம்மாவோட மருமகள் என்று சொல்ல சுந்தரவள்ளியின் முகம் மாறுகிறது. நீங்களும் தில்லை ராஜன் அய்யாவோட குடும்பமும் சேர்ந்து கிரீடத்தை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்ல சரி வந்த வேலைய பார்ப்போம் என திருவிழா பத்திரிக்கையை வைக்கின்றனர். பத்திரிகையை வாங்கிய பிறகு அதில் பிரசிடெண்டாக இருக்கும் ராஜாங்கம் பெயர் இல்லாமல் இருப்பதால் சுந்தரவல்லி நான் அவர்கிட்ட போன் போட்டு பேசுறேன் என சொல்லி போன் போட்டு கொடுக்க சொல்ல, எல்லார் பேரையும் போட்டுட்டு எதுக்கு உன் பேர் போடல என்று கேட்க கோபுரத்தின் உச்சியில் இருக்கிறவங்களோட பெயர் இருக்க வேண்டிய இடத்துல என் பேரு இருக்கலாமா ஆத்தா நீங்க செலக் கல்லு நான் பனி கல்லு என் பெயர் விட்டது தான் குத்தம் என்றால் அதுக்கு ஒரு குத்தமே கிடையாது.
எப்பவுமே என் பெயர் பத்திரிக்கை வராது என்று சொல்ல சுந்தரவள்ளியும் சரி உன் கிட்ட பேசி சமாளிக்க முடியுமா என சொல்லிவிட்டு சரி ஊருக்கு வந்து பேசிக்கலாம் என்று போனை வைக்க ஊர்காரர்கள் அனைவரும் சரி நாங்கள் கிளம்பறோம் என சொல்லிவிட்டு கிளம்ப சரி பத்திரமா போயிட்டு வாங்க நம்ம திருவிழாவில் சந்திப்போம் என குடும்பத்தினர் அவர்களை வழி அனுப்பி வைக்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

