மாதவி போட்ட பிளான், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்ச. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சூர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க நந்தினி பாயுடன் வெளியே வர சூர்யா என்னடா உன் பொண்டாட்டி பாயோட வெளியே வந்துகிட்டு இருக்கா என்று சொல்ல மாலினி மாலினி என்ற சூர்யா கூப்பிட அவர் திரும்பி பார்க்காமல் இருக்க அருணாச்சலம் கூப்பிட உடன் வந்து நிற்கிறார். ராத்திரி நேரத்தில எங்கம்மா போய்கிட்டு இருக்கு என்று கேட்க நான் என்னோட இடத்துக்கு போறேன் ஐயா என்று சொல்லுகிறார். உன்னுடைய இடமா என்னமா சொல்ற என்று சொல்ல நான் கிச்சனுக்கு போறாயா வேலைக்காரர்கள் அங்கதானே தூங்குவாங்க என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் இவன் உனக்கு தாலி கட்டிருக்கான் ஆறு மாசமும் ஆயுசு முழுக்கவோ நீ இந்த வீட்டோட மருமக என்று சொன்ன இல்லையா நான் அங்கே படுத்துகிறேன் என்று சொல்லுகிறார்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update

நேத்து வரைக்கும் நான் ரூம்ல தான் படுத்துக்கிட்டு இருந்தேன் ஆனா புஷ்பா அக்கா கிட்டயும், கல்யாண அண்ணன் கிட்டயும் பேசிகிட்டு இருந்தா மனசுக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்ல, அருணாச்சலம் அவரை சமாதானப்படுத்தி சூர்யாவின் ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார். உடனே சூர்யாவும் குட் நைட் என்று சொல்ல, உடனே அருணாச்சலம் அவ பேர் என்ன சொல்லு என்று சொல்ல மாலினி ,காமினி, யாழினி என்று சொல்ல கல்யாணம் ஆயிடுச்சு அந்த பொண்ணு பேரு தவிர மீதி எல்லா பொண்ணுங்க பேரை சொல்லிக்கிட்டு இருக்கோம் மீதி பேர் இருந்தா எல்லாரும் எவ்வளவு சண்டை வந்திருக்கும். என் பொண்டாட்டி பேரு நந்தினி என்று சொல்லிக் கொடுக்க உடனே சூர்யா என் பொண்டாட்டி பேரு நந்தினி, நந்தினி என்று திரும்பத் திரும்ப சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார். நான் காலையில கேட்பேன் நீ கரெக்டா சொல்லணும் என்று சொல்லிட்டு சொல்லிக்கிட்டே உள்ள போ என்று சொல்லுகிறார். ரூமுக்குள் வந்த பிறகும் என் பொண்டாட்டி பேரு நந்தினி, நந்தினி என்று சொல்லிக் கொண்டே தூங்குகிறார். உடனே நந்தினி எழுந்து வந்து என்ன பேசுகிறார் என்று சூர்யாவின் பக்கத்தில் வந்து கேட்கிறார். உடனே சூர்யா சார் என்று எழுப்ப சூர்யா அலறி எழுந்திருக்க என்ன சார் பேசிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்க மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். அதுதான் என்ன சொன்னீங்க ன்னு கேட்க என் பொண்டாட்டி பேரு நந்தினி, என் பொண்டாட்டி பேரு, நந்தினி என்று மீண்டும் மீண்டும் சொல்ல அப்படியெல்லாம் சொல்லாதீங்க என்று நந்தினி சொல்லுகிறார்.

நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது பொண்டாட்டி மாதிரி என்று சொல்ல இப்ப இது ஓகேவா பாரு என்று சொல்லிவிட்டு என் பொண்டாட்டி மாதிரி நந்தினி, நந்தினி மாதிரி என் பொண்டாட்டி என்று ரிப்பீட்டாக அதையே பேசுகிறார். சூர்யா புலம்பி கொண்டிருப்பதை சுந்தரவல்லி பார்த்து கடுப்பாகிறார்.

மறுபக்கம் சிங்காரம் குடும்பத்தினர் ஒரு வீடு வாடகைக்கு பார்த்து அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் ஸ்கூலுக்கு போகறதுக்கு தான் கஷ்டம் என்று சொல்ல நான் காலேஜுக்கு போகும்போது நானே கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று சொல்ல, அக்காவ பாத்து ரொம்ப நாளாச்சு அக்காவை பார்க்க போகணும் என்று சொல்லுகிறார். தல தீபாவளிக்கு சீர் கொடுத்துட்டு வரணும் என்று முடிவெடுக்க அம்மாச்சியும் அதுதான் சரி ஆனா அவங்க பொண்ணு வீட்டுக்கு தான் வரணும் என்று சொல்ல, சிங்காரம் இப்ப இருக்குற நிலைமைக்கு அவங்க எப்படி வர முடியும் என்று சொல்லுகிறார்.

தீபாவளிக்கு துணி மணியோ இல்ல ரெண்டு கிராம்ல மோதிரமோ எடுக்கணும் என்று சொல்ல நந்தினியின் தங்கை கோபப்படுகிறார். அம்மாச்சி உனக்கு இதெல்லாம் தெரியாது கம்முனு இரு என்று அவரை அடக்குகிறார். கம்முனு இருங்கம்மா நானே மோந்திரத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்க என்று சொல்ல உடனே நான் ஊருக்கு போனப்ப எடுத்துட்டு போன பேகை வேகமா எடுத்துக்கிட்டு வா என்று சொல்லுகிறார். பிறகு அதில் சூர்யாவுக்காக நந்தினி எடுத்த மோதிரம் இருக்கிறது.

அம்மாச்சி இது என்ன மாப்ளமோ மோதிரம் என்று கேட்க சூர்யா தம்பிக்காக நந்தினி ஆசையா எடுத்துச்சு என்று சிங்காரம் சொல்ல அம்மாச்சி அப்போ ஆண்டவன் ஏதோ ஒரு முடிச்சு போட்டுருக்கான் என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினி பார்க்க கிளம்ப முடிவெடுக்கின்றனர். ஆனா பல காரத்துக்கும் டிரஸுக்கும் என்ன பண்றது என்று திணறிக் கொண்டிருக்க அம்மாச்சி கொஞ்சம் நகையை அடமானம் வச்சுக்கலாம் என்று சொல்ல முதலில் சிங்காரம் மறுக்கிறார்.ஆனால் நந்தினி என் தங்கை அக்கா தானே பண்ணிக்கலாம் என்று சொன்னவுடன் அவர் சந்தோஷப்படுகிறார்.

நந்தினி வீட்டு வேலை செய்து கொண்டிருக்க, சிங்காரம் குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். நந்தினி அவர்களை பார்த்தவுடன் வெளியில் ஓடி வந்து தங்கைகளை கட்டிப்பிடித்து அழுகிறார். இவர்களைப் பார்த்து அம்மாச்சியும் கண்கலங்குகிறார். பிறகு அம்மாச்சியும் நந்தினி கண்டுபிடித்து அழ குடும்பத்தினர் கண்கலங்குகின்றன. எப்படிப்பா இருக்கீங்க என்று கேட்க எங்களை விடுக்கா, நீ எப்படி இருக்க என்று கேட்கின்றனர். நீ ஏன்கா இங்கேயே இருக்க நம்ம வீட்டுக்கு வரலாம் இல்ல என்று சொல்லுகிறார். அவ பேசட்டும் விடுப்பா என்று நந்தினி சொல்லி அழுகிறார். நீங்க மட்டும் இல்ல நானும் தினமும் உங்க நெனப்புல தான் இங்கே இருக்க என்று சொல்லி கண் கலங்குகிறார்.

நந்தினி கழுத்தில் இருக்கும் தாலியை அம்மாச்சி பார்த்துவிட்டு, என் தங்கமே காலம் ஃபுல்லா அழுவணும்னு உன்ன படைச்சவன் உன் தலையில எழுதிட்டானே, தங்கச்சிகளுக்காக வாழ இருந்த உன்ன, இப்படி ஒரு நிலைமையில பாப்பான்னு நான் நினைக்கல என்று அழ நந்தினியும் அழுகிறார். உடனே சிங்காரம் சின்ன புள்ளைங்க தான் அழுகுதுனா நீங்களும் இப்படி பேசினா எப்படிமா என்று சொன்னால் என்னால முடியல மாப்பிள்ளை, என்று சிங்காரத்திடம் சொல்லி அழுகிறார். கல்யாணத்துக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போன நீங்க கால் உடைஞ்சு வந்திங்க, ஆனா என் பேத்திக்கு வாழ்க்கையே போயிடுச்சு என்று அழுகிறார். எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி பண்ற நீ உனக்கு ஒரு நல்லது பண்ணிக்காம விட்டுட்டியே அக்கா என்று தங்கை அழுகிறார். இருந்தாலும் நம்ம மேல தான் தப்பு இருக்கு நம்ப ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருந்தா எப்படி நடந்து இருக்குமா என்று சொல்ல உடனே சிங்காரம் கோபப்பட்டு ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம பொண்ணு வாழற வீடு நம்ம எப்படியும் பேசக்கூடாது என்று சொல்லுகிறார். இந்த கல்யாணத்தை பத்தி ஊருல எல்லாரும் என்னப்பா நினைக்கிறாங்க என்று சொல்ல எல்லோரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் ஆனால் நந்தினியின் தங்கை அது எப்படி நல்லா பேசுவாங்க நல்லா பேசவே மாட்டாங்க இந்தக் கல்யாணத்தை நம்ம குடும்பமா சேர்ந்து பிளான் பண்ணி பண்ணனும்னு பேசுறாங்க என்று சொன்னவுடன் நந்தினி வருத்தப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் நந்தினி தோப்பு விட்டுட்டு எப்படி போனீங்க என்று கேட்க அடிச்சு துரத்துனா எப்படி போகாம இருக்க முடியும் என்று தங்கை கேட்கிறார்.

அந்த கும்பல் தொக்கா வந்து சிக்கி இருக்கு பொறுமையா வச்சு செய்வோம் என்று சுரேகாவிடம் மாதவி சொல்லுகிறார். மாப்பிள்ளை வந்தது பார்த்துட்டு போயிரும் இன்று நந்தினி தான் அம்மாச்சி சொன்ன உடனே நந்தினி கோபப்பட்டு திரும்பத் திரும்ப மாப்பிள்ளை என்று சொல்லாத அம்மாச்சி என்று சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update