நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி,சவால் விடும் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க நந்தினி சூர்யா சட்டை உடன் வெளியில் வருவதை கவனிக்கின்றனர். உடனே மாதவி அந்த அளவுக்கு இவங்க கிளோஸ் ஆயிட்டாங்களா தப்பா இருக்கு என்று சொல்லி கீழே இறங்கி வருகின்றனர். கிச்சனில் நந்தினி வந்து நிற்க என்னம்மா சின்னையா சட்டை போட்டு வந்திருக்க என்று கேட்க ஏதாவது பிரச்சனையா என்று கேட்க இதுக்கு அப்புறம் வரும் என்று சொல்லுகிறார். எனக்கு நந்தினி நடந்த விஷயத்தை கல்யாணத்திடம் சொல்லுகிறார். இதனால தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரப்போகுது என்று சொல்ல கல்யாணம் ஆறுதல் சொல்லுகிறார். சின்னையாவே இப்படி சொல்லியிருக்கார்னா அப்போ அதுக்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று சொல்லி இருவரும் வேலையை செய்கின்றனர். மறுபக்கம் மாதவி சுந்தரவள்ளியிடம் வந்து சூரியா சட்டையை நந்தினி போட்டு இருக்கா என்று சொல்லி சொன்னவுடன் சுந்தரவல்லி கோபப்படுகிறார்.
நேற்று சூர்யாவோட தட்டில் சாப்பிட்டா இன்னிக்கி அவ சட்டைய போட்டு இருக்கா என்று பேச அருணாச்சலம் இதெல்லாம் எதுக்கு பெருசாகிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லியும் கேட்காமல் சுந்தரவல்லி நந்தினி பார்க்க வேக வேகமாக வர சூர்யா கீழே இறங்கி வந்து விடுகிறார். சுந்தரவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க நந்தினி காபி கொடுத்துவிட்டு போக வேண்டுமென்றே சூர்யா நந்தினி இடம் கொஞ்சி பேசுகிறார். சட்டையை பற்றி பேச உடனே சுந்தரவல்லி, அவகிட்ட சட்டைய கொடுத்திருக்கேன்னு சொல்றியே உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்க பெருமையா இருக்கு என்று சொல்லுகிறார். இதுக்கு பதிலாக புடவை எடுத்து நீ கட்டிப்பியா என்று கோபப்பட்டு திட்ட உடனே நந்தினி அழைத்துக் கொண்டு மேலே சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் சூர்யா நந்தினி புடவையை கட்டிக்கொண்டு கீழே இறங்கி வர குடும்பத்தினர் அதிர்ச்சியாகி நிற்கின்றனர்.
அருணாச்சலமும் நந்தினியும் சிரிக்க சூர்யா அசோகனுடன் சேர்ந்து டான்ஸ் ஆட சுந்தரவல்லி உச்சகட்ட கோபமடைகிறார். உடனே என்னோட லேடி கெட்அப் எப்படி இருக்கு தாய்குலத்துக்கு தான் நன்றி சொல்லணும் என்று சொல்ல சுந்தரவல்லி சென்று விட சூர்யாவும் நம்மளும் அவங்களுக்கு முன்னாடி ஆபீஸ் போகணும் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். நீ எதுக்காக தூண்டி விடுற என்று சொல்ல, நான் பண்றது எல்லாம் தான் உங்களுக்கு தப்பா தெரியும் எல்லாம் அவள சொல்லணும் என்று சொல்ல சூர்யா சொல்லாமல் நந்தினி எப்படி செய்வா. உன்ன பொறுத்த வரைக்கும் அவ வீட்டோட வேலைக்காரி ஆனா சூர்யாவுக்கு அவ பொண்டாட்டி என்று சொல்லுகிறார். புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் நம்ம எதுக்கு தலையிடனும் அப்படி மீறினால் இப்படித்தான் புலம்பனும் என்று சொல்ல சுந்தரவல்லி கொஞ்ச நேரம் அமைதியா வரீங்களா என்று சொல்லி கோபத்தில் வண்டி ஓட்டி செல்கிறார்.
நந்தினி வீட்டில் கிளம்பி ரெடியாக இருக்க டென்ஷனாக இருக்கிறார். கல்யாணம் வந்து என்னாச்சும்மா என்று கேட்க, சூர்யா சார் என்ன கம்பெனில ஏதோ ஒரு மீட்டிங்கு கூட்டிட்டு போய் உட்கார வைக்க போறேன்னு சொல்றாரு என்று சொல்ல கல்யாணம் சந்தோஷப்படுகிறார். நீங்க வேற அந்த இடத்துல எனக்கு ஒண்ணுமே தெரியாது நான் என்ன பண்ணப் போறேன் என்று சொல்ல அதெல்லாம் சின்னையா பார்த்து பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூர்யா வேகவேகமாக கீழே இறங்கி வந்து போலாமா என்று கேட்க நந்தினி தயங்க பிறகு சூர்யா அதெல்லாம் போற வழியில பாத்துக்கலாம் என்று சொல்லி கூப்பிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இவன் பதவியை தூக்கி அவகிட்ட கொடுத்துட்டாங்க வெளியே போக சொல்லுங்க என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். நீங்க கண்டினியூ பண்ணுங்க என்ற மீட்டிங்கில் இருப்பவர்களிடம் இங்கிலீஷில் சொல்ல நந்தினி இடமாக அவர்கள் இங்கிலீஷில் பேச அமைதியாக நந்தினி இருக்கிறார். நீங்க எல்லாம் எதை அறிவாளின்னு நம்புறீங்களோ அந்த சர்டிபிகேட் நான் வாங்க வைக்கிறேன் என்று சவால் விடுகிறார். என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

