சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் பொங்கல் வைத்துவிட்டு அனைவரும் சாப்பிட உட்கார வழக்கம்போல் அருணாச்சலம் நந்தினி பாராட்டி பேசுகிறார். அசோகன் நெலிந்து கொண்டு இருக்க, என்னாச்சு என்று அசோகன் கேட்க எதையோ சொல்லி சமாளிக்கிறார். பொங்கல் அவ்வளவு தானா டாடி என்று கேட்க கிராமத்தில் இன்னும் அதிகமா இருக்கும் நம்ம என்ன பண்ண முடியும் அவ்வளவு தான் என சொல்ல அசோகனை சூர்யா கவனித்து விட்டு கேஸ் பிரச்சனையா கேஸ் பிரச்சனையா என்று வாயை கிளற உடனே அசோகன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நம்ம வாயிலிருந்தே உண்மையை வர வச்சுடுவான் என்று சொல்லி ஓடி விடுகிறார். அசோகன் ரூமுக்கு வந்து விட மாதவி வந்து திட்டுகிறார். இந்தக் கல்லு எப்படி வந்து என்னை அடிச்சிருக்கு பாரு என்று கல்லை எடுத்துக்காட்ட இது எதுக்கு வச்சிருக்க கையும் களவுமாக சிக்கவா தூக்கி வீசு என்று சொல்ல அசோகன் தூக்கி வீச அது சுந்தரவள்ளியின் தலையில் பட்டுவிடுகிறது. உடனே ரூமுக்கு வர மாதவி அவருக்கு தைலம் தேய்த்து விடுகிறார்.
ரூமுக்கு வந்தவுடன் கல்லை எடுத்துக்காட்டி என்னது இது என்று கேட்கிறார். இந்த ரூம்ல இருந்து தான் வெளிய வந்தது யார் இப்படி பண்ணது நான் தான் தெரியாம போட்டுட்டேன் என்று சொல்லி திட்ட கொஞ்சம் கூட ரெண்டு பேருக்கும் மூளையை இல்லையா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் கம்பெனி ஆட்கள் வீட்டுக்கு வர சுந்தரவள்ளியும் அருணாச்சலமும் நீங்க வர சொன்னீங்களா என்று கேட்க இல்லையென்று சொல்ல பிறகு அவர்களிடமே கேட்க நாங்க பொங்கல்லாம் கொண்டாடிட்டு உங்களுக்கு மரியாதை பண்ணி ஆசீர்வாதம் வாங்கிட்டு போகலாம்னு வந்தோம். சின்ன முதலாளி தான் இந்த ஐடியா சொன்னாரு என்று சொல்ல நந்தினி இதைக் கேட்டுவிட்டு வந்து சூர்யாவிடம் வந்து சொல்லுகிறார். அருணாச்சலம் சுந்தரவல்லி சூர்யா மூவருக்கும் மாலை மரியாதை செய்ய பிறகு நந்தினிக்கு போட வர கம்பெனியை சுத்தமாக வச்சுக்கிட்ட துப்புரவு வேலை செஞ்ச அந்த அம்மாவுக்கு மாலை போடணும் என்று சொல்லி நந்தினி மாலை போட்டு பாராட்டி பேசுகிறார்.
உடனே கம்பெனி வேலையாட்கள் கிளம்பறோம் என்று சொல்ல, அதுக்குள்ள வா கேம்ஸ் எல்லாம் இருக்கு அதெல்லாம் விளையாடிட்டு சாப்பிட்டு போகலாம் என்று சூர்யா சொல்லுகிறார். உடனே சுரேகா இந்த ஐடியா எல்லாம் அவளோட தான் இருக்கும் என்று சொல்லுகிறார். இந்தப் பொங்கல சிறப்பா கொண்டாட நான் நிறைய கேம்ஸ் வெச்சிருக்கேன் அதுக்கு கிஃப் இருக்கு முதலில் லெமனன் அண்டு ஸ்பூன் விளையாடுவோம் என்று சொல்லி ஆரம்பிக்க முதலில் லெமன் அண்ட் ஸ்பூன் விளையாடுகின்றனர் பிறகு அடுத்தடுத்து கேம்களை தொடர்ந்து விளையாடுகின்றனர். கணவன் மனைவி சேர்ந்து விளையாடும் விளையாட்டு ஒன்று நடக்கிறது. செங்கல் மீது மனைவி நடக்க கணவர் ஒரு ஒரு செங்கலையும் முன்னால் எடுத்து வைக்க வேண்டும் இந்த போட்டியில் சூர்யா நந்தினி அசோகன் மாதவி என அனைவரும் விளையாடுகின்றனர்.
இந்த கேம் இல் சூர்யாவும் நந்தினியும் ஜெயிச்சு விடுகின்றனர். ஒரு கண்ணாடி டப்பாவில் சீட்டுகளை குலுக்கி போட்டு விட்டு பாட்டிலை சூர்யா சுத்தி விடுவதாகவும் யார் பக்கம் பாட்டில் இருக்கிறதோ அவர்கள் எடுக்கும் சீட்டில் என்ன இருக்கிறதோ அதை செய்ய வேண்டும் என சொல்லிவிட சுரேகா ஒரு சீட்டை எடுக்க அதில் படத்தின் பெயரை செய்கையின் மூலம் சொல்ல அதை ஒருவர் கண்டுபிடிக்க வேண்டும் என சொல்ல சுரேகா அசோகனை தேர்ந்தெடுக்கிறார். சுரேகா நடித்த காட்ட அசோகன் தப்பு தப்பாக கண்டுபிடிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் பாட்டில் சுத்தி விடும் கேமில் சுந்தரவல்லி பக்கம் நிற்க எல்லோரும் பண்ணாங்கன்றதுல்ல என்னால பண்ண முடியாது என்று சுந்தரவல்லி சொல்ல அதற்கு சூர்யா ரூல்னா ரூல் தான் நந்தினி பன்னால என்று சொல்லுகிறார்.
பிறகு கேம் எல்லாம் முடிந்த உடன் சூர்யா அனைவரிடமும் இது எல்லாத்துக்கும் ஐடியா கொடுத்தது என்னோட பொண்டாட்டி நந்தினி தான் என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார். உடனே சூர்யா ஹாப்பி பொங்கல் ஹாப்பி பொங்கல் ஹாப்பி பொங்கல் என கத்துகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

