சுந்தரவல்லி செய்த வேலை,கடுப்பான சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி ஆபீசுக்கு வர மாட்டேன் என பிடிவாதமாக இருக்க சூர்யா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். சுந்தரவல்லி ஆபீசுக்கு வந்தவுடன் மீட்டிங்கை ஆரம்பிக்கலாமா என்று கேட்க இன்னும் சிஇஓ வரல என்று சொல்ல அது அவங்களோட டைமிங்ல வந்து இருக்கணும் யாருக்காகவும் வெயிட் பண்ண முடியாது என்று சொல்லி ஆரம்பிக்கச் சொல்லுகிறார். கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமே என்று அருணாச்சலம் சொல்ல, சூர்யாவும் நந்தினியும் வந்து விடுகின்றனர். இது பிசினஸ் மீட்டிங் இவனோட சிஇஓ பதவியை இவகிட்ட கொடுத்துட்டான்ல இப்போ இவன் எதுக்கு இங்க உக்காந்துகிட்டு இருக்கான் வெளியே போக சொல்லுங்க என்று சொல்ல சூர்யா நந்தினியை உள்ளே உட்கார சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். உடனே மீட்டிங் ஆரம்பிக்க சுந்தரவல்லி அனைவரிடமும் இங்கிலீஷில் பேசுகிறார். பதிலுக்கு அவர்களும் இங்கிலீஷில் பேச நந்தினி பயப்படுகிறார். உடனே சுந்தரவல்லி நந்தினியிடம் டிஸ்கஸ் பண்ணி கேளுங்க நல்ல ஐடியா சொல்லுவா என்று இங்கிலீஷில் சொல்ல அவரும் இங்கிலீஷில் பேச நந்தினி தடுமாற அருணாச்சலம் உதவி செய்ய வர அவரையும் சுந்தரவல்லி தடுக்கிறார்.
உடனே சுந்தரவல்லி கிண்டல் பண்ண அனைவரும் சிரிக்கின்றனர் உடனே அருணாச்சலமும் நந்தினியும் வெளியில் வந்துவிட நம்ம மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம் என்று சொல்லி விடுகின்றனர். நந்தினி அழுது கொண்டு வர சூர்யா என்னாச்சு என்று கேட்கிறார். அதற்கு அருணாச்சலம் எல்லாரும் முன்னாடியும் இங்கிலீஷ்ல பேச சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க என்று சொல்லி சொல்ல சூர்யா நந்தினி உடன் உள்ளே வந்து உங்க எல்லாருக்கும் தமிழ் தெரியும் இல்ல அதை விட்டுட்டு எதுக்கு இங்கிலீஷ்ல பேசினீங்க அவளை அசிங்கப்படுத்தவா இப்போ என்ன அவளுக்கு இங்கிலீஷ் தெரியாது அவ்வளவு தானே நான் நந்தினியை படிக்க வைக்கிறேன் எத கொடுத்தாலும் இந்த உலகத்துல அறிவாளி என்று அவள நம்புவீங்களோ அந்த சர்டிபிகேட்டை அவளுக்கு நான் வாங்கி தருவேன் என்று நேருக்கு நேராக சவால் விடுகிறார். ஆனா அது குறுக்கு வழியில கிடையாது நிறைய படிக்க வச்சு நான் வாங்க வைப்பேன். அவ கிட்ட இருக்கிற திறமை உங்ககிட்ட இருக்கா அவ எவ்வளவு சூப்பரா விவசாயம் பண்ணுவா தெரியுமா என்று கேட்கிறார்.
100 பேர வச்சி அவளால வேலை வாங்க முடியும் உங்க யாராலயும் அத பண்ண முடியாது. உங்க எல்லாருக்கும் நந்தினி அவ சக்சஸ் மூலயமா பதிலடி கொடுப்பா கொடுக்க வைப்பேன் என சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார். காரில் நந்தினி கண்கலங்க சூர்யா தைரியப்படுத்தி ஆறுதல் சொல்லுகிறார். ஒரு விஷயம் நம்மளுக்கு தெரியலனா அதை கத்துக்க நம்ம முயற்சி பண்ணனும் அவங்க வேணும்னே தான் உன்னை அசிங்கப்படுத்த பிளான் போட்டு இருக்காங்க அதே கேள்வியை தமிழ்ல கேட்டு இருந்தா நீ அதை தூள் கிளப்பி இருப்ப அவங்க உன்ன முதுகுல குத்த பாக்குறாங்க ஏற்கனவே நீ பிளஸ் டூ படிச்சிருக்க இன்னும் மூனே வருஷம் அவங்க கேட்கிற தகுதி எல்லாம் வந்துடும் என்று சொல்லுகிறார்.
உன்ன நான் படிக்க வைக்கிறேன். நீ யாரு இல்லனாலும் நானே இல்லனாலும் நீ தைரியமா இருக்கணும் அது உன்னை இந்த சொசைட்டில தைரியமா வாழ வைக்கும் கவலைப்படாத நந்தினி என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் வீடே கடல் மாதிரி இருக்கு அப்புறம் வேற எங்க பண்ணனும் இங்கே பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி மாதவி இடம் அந்த இன்விடேஷனை படி என சொல்லு அவரும் படுக்கிறார். மறுபக்கம் நந்தினி சூர்யாவிடம் என் பேர போட்டு இருந்தா வீட்ல பெரிய பிரச்சனை வந்திருக்கும் அதுக்கு இது இவ்வளவு மேல் என்று சொல்லுகிறார். நான் திருப்பி அடிக்கிற அடியை அவன் எப்படி தாங்குறாங்கன்னு நான் பாக்குறேன் என்று அருணாச்சலத்திடம் கோபப்பட்டு சூர்யா சொல்கிறார்.என்ன நடக்க போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

