Pushpa 2

நந்தினி மீது விழுந்த திருட்டுப்பழி, பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update

நேற்றைய எபிசோடில் எல்லாமே தெரிஞ்சுதான் இப்படி பண்ணி இருக்கீங்க என்று நந்தினி கேட்க, சூரியா உனக்கு என்ன இங்க குறையா இருக்கு என்று கேட்க இப்பதான் எனக்கு புரியுது, உங்க வீட்டில வேலைக்காரிக்கு தாலி கட்டிட்டு வாழ்க்கை கொடுத்திருக்கிறது தான் நினைச்சு இருக்கீங்களா? என்று கேட்க, உடனே சூர்யா தாலி கட்டினதிலிருந்து உன்னை ஏதாவது டிஸ்டர்ப் பண்ணி இருப்பனா, என்று கேள்வி கேட்கிறார். இன்னும் கோபப்பட்ட சூர்யா இந்த உலகத்துல எனக்கு இருந்த ஒரே சந்தோஷம் இந்த சரக்கு மட்டும் தான். உடனே இத்தனை நாளா நீ சொன்னதை நான் சொல்றேன் நீ என் பொண்டாட்டி கிடையாது பொண்டாட்டி மாதிரி தான் என்று கத்தி சொல்லிவிட்டு எல்லாத்தையும் உடைச்சுட்டியேடி என்று அடிக்கப் போக அருணாச்சலம் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

இவ எப்படி பண்ணி வச்சிருக்க பாருங்க டாடி என்று சொல்லுகிறார் இவளுக்கு எவ்வளவு திமிரு பாருங்க ஒளிச்சு வச்சுட்டு தெரியாது என்று சொல்லி உடைச்சுட்டா கேளுங்க டாடி, எனக்கு வர கோபத்துக்கு அவளை அடிச்சே கொன்னுடுவேன் என்று சொல்லுகிறார். சூர்யா டென்ஷனாகி கத்த அருணாச்சலம் அவரை வெளியே போக சொல்ல அவரும் சென்று விடுகிறார். பிறகு அருணாச்சலம் நந்தினி இடம் மன்னிப்பு கேட்கிறார். என்ன நடந்திருந்தாலும் உன் மேல தப்பு இருக்காதுன்னு நான் நம்புறேன் எனக்காக ஒன்னு பண்ணு என்று கேட்கிறார். உடனே நந்தினி கையெடுத்து கும்பிட்டு என்ன கொஞ்ச நேரம் தனியாக விடுங்கள் ஐயா என்று சொல்ல அனைவரும் வெளியே கிளம்பி விடுகின்றனர் நந்தினி அங்கே உட்கார்ந்து கண்கலங்கி அழுகிறார்.

உடனே மாதவி சுரேகா அசோகன் என மூவரும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்க சுரேகா இவ என்ன பாட்டிலெல்லாம் உடைச்சிக்கிட்டு இருக்கா சூர்யாவை திருத்த பாக்குறாளா என்று கேட்கிறார். உடனே அசோகனை நீங்க சூர்யா பின்னாடி போயி அவன் என்ன பண்றான்னு பாருங்க என்று அனுப்பி வைக்கிறார். அவ குடிகாரனா இருந்தா மட்டும்தான் நம்ம இந்த வீட்ல சந்தோஷமா இருக்க முடியும். அவன் திருந்திட்டால் நம்ப ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறார். நடக்கிறப்ப பாத்துக்கலாம் என்று மாதவி சொல்லுகிறார்.

உடனே நண்பனை சந்தித்து குடித்துக்கொண்டே சூர்யா நந்தினி சரக்கு பாட்டில் கொடுத்ததை பற்றி கோபமாக பேசி திட்டுகிறார். நந்தினிக்கு உன்ன பத்தி தெரியாதுடா தெரியாம பண்ணி இருப்பாங்க விடு என்று சொல்ல,உடனே அதை எப்படி பண்ணலாம் அதுதான் என்னோட கேள்வி என்று சொல்லுகிறார். அவ உன் பொண்டாட்டி சரக்கு பாட்டில் இல்ல உன்ன கூட தூக்கி போட்டு மிதிக்கிற அளவுக்கு உரிமை இருக்கு என்று சொல்லுகிறார். உன் லைஃப்ல மாறதுக்கு கடவுளா கொடுத்த ஒரு ஆள் தான் நந்தினி நீயே கெடுத்துக்காத என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அசோகன் வர இருவரும் மாமா மாப்ள என்று கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார். பொண்டாட்டி மட்டும் இல்ல வேற யாருக்காகவும் நம்ம சந்தோஷத்தை விற்ற கூடாது என்று சொல்ல சூர்யா சந்தோஷத்தில் அசோகனுக்கு சரக்கை ஊத்தி விடுகிறார்.

கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க, நந்தினிக்கு குடுத்தியா என்று கேட்கிறார் இல்லையா இப்பதான் கொடுக்கப் போறான் என்று சொல்ல சரி நானே கொடுக்கிறேன் என்று எடுத்துக் கொண்டு செல்கிறார். காஃபியை கொடுக்க முதலில் மறுத்த நந்தினி பிறகு வாங்கிக் கொள்கிறார். உன்னோட சூழ்நிலை என்னால புரிஞ்சுக்க முடியுதும்மா, நான் இந்த வீட்ல இருமானு கெஞ்சி கேட்கும் போது, நீ சம்மதித்த ஆமா சூர்யாவோட மாற்றம் எனக்கு நல்லா தெரிஞ்சது. எல்லாமே கொஞ்ச நாள்ல மாறிடும் நெனச்சா அவன் உன்னை அடிக்க கை ஓங்கிட்டு நிக்கிறான். எனக்கு ஒண்ணுமே புரியல, சூர்யாவோட கோபம் எனக்கு புரிஞ்சாலும் நீ எதுக்கு பாட்டிலை ஒலிக்க வச்ச உடைச்சேன்னு எனக்கு தெரியல.

அவனை எப்படியாவது குடிக்க விடாமல் பண்ணிடுமா அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணு என்று சொன்ன அதற்கு நந்தினி தயவு செய்து என்னை விட்டுடுங்க ஐயா, என்னால முடியல உங்க பையன குடிக்காமல் திருத்துறது என்னோட வேலை கிடையாது. அம்மா இல்லாத என்னோட தங்கச்சிங்களுக்கு நான்தான் அம்மா என் மனசு புல்லா அது தான் ஓடிக்கிட்டு இருக்கு ஆனா நீங்க உங்க மகனை திருத்த சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அப்போ இதெல்லாம் எதுக்குமா தூக்கி போட்டு உடைச்சி கிட்டு இருக்கேன் என்று கேட்க என் வாழ்க்கை கெட்டுப் போக இதுதானே காரணம், இதைக் குடிச்சிட்டு தானே என் கழுத்துல தாலி கட்டினார், அவங்க அம்மாவுக்காக என்கிட்ட நடந்துக்குறது எனக்கு புடிக்கல இந்த ரூமுக்குள்ள நுழைஞ்சாலே சாராய நாத்தம் மூச்சு விட முடியல மூச்சு முட்டுதுயா என்று அழுகிறார். நீ ஆறு மாசம் இங்க இருந்தாலும் சூர்யாவை ஒரு முழு மனிதனா மாத்த உன்னால மட்டும் தான் முடியும். மறுபடியும் தயவு செய்து என்னை விட்ருங்க ஐயா என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி ரூமுக்கு வந்து சூர்யா எங்கே, என்ன நடக்குது சூர்யாவை திட்றதுக்கு இவ யாரு. பெத்தவங்க நம்பளே கண்டிக்கிறது கிடையாது எங்கிருந்தோ வந்த இவ கண்டிக்கிறார் என்று சுந்தரவல்லி கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் என்ன சுத்தி வெறும் பிரச்சனை மட்டும்தான் இருக்கு என்று நந்தினி யோசித்துக் கொண்டிருக்க வீட்டிற்குள் வந்த இரண்டு பேர் நகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர்.

பிறகு மாதவி நந்தினி தான் காரணம் என்று சொல்ல நீங்க சொல்லி தான் நகை காணாமல் போனது எனக்கு தெரியும் என்று சொல்ல அவர்கள் போலீசை வரவழைத்து நந்தினியை அரஸ்ட் செய்கின்றனர். இந்த பழியில் இருந்து நந்தினி எப்படி வெளியே வரப் போகிறார் என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update