நீல்கிரிஷ் முருகன் தயாரிப்பில் ஏ.எல். வெங்கி இயக்கத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூத்தன்.

நாளை (அக்டோபர் 11) முதல் வெளியாக உள்ள இப்படத்தில் பால்ஸ் ஜி இசையில் டி.ராஜேந்தர் அவர்கள் மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்ற பாடலை பாடியிருந்தார்.

தற்போது இந்த பாடல் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை வைத்து பல மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ் ஆகியவை உருவாக்கி சமூக வலையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த மங்கிஸ்தா கிங்கிஸ்தா பாடல் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

தற்போதும் கூட பிரேசில் பாடகி ஒருவர் இப்பாடலை பாடி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

YouTube video

மேலும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே தமிழகம் முழுவதும் ராஜ்குமாருக்கு ரசிகர்கள் மன்றங்கள் உதயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் உருவாகி இருப்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.