அமலா பாலுடன் மங்கி செல்பி எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு மைனா என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். தளபதி விஜய் உடன் தலைவா படத்தில் இணைந்து நடித்த போது இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

திருமண விவாகரத்துக்கு பிறகு படங்களில் கவர்ச்சியாகவும் சோலோ நாயகியாகவும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சுற்றுலா சென்ற போது அமலாபால் உடன் சேர்ந்து மங்கி செல்பி எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இதைப் பார்த்த ரசிகர்கள் எப்புட்றா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.