வீட்டுக்கு வந்த இரண்டு புதிய உறவுகள் குறித்து டி இமான் முன்னாள் மனைவி பதிவு செய்துள்ளார்.

Monicka Richard About Her Pets : தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இமான். இவர் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

வீட்டுக்கு வந்த இரண்டு புதிய உறவு.. டி இமானின் முன்னாள் மனைவி போட்ட பதிவு - புகைப்படத்துடன் இதோ.!!

12 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனையடுத்து இமான் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பனிரெண்டு வருடங்கள் செய்து கொண்டும் என்னால் இன்னும் எதையும் மறக்க முடியவில்லை அதற்குள் உங்களுக்கு இரண்டாவது திருமணம் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் மோனிகா.

இதனை தொடர்ந்து தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த புதிய உறவினர்கள் என தெரிவித்துள்ளார். உண்மையான அன்பு பாசம் கிடைக்காமல் நானும் என்னுடைய குழந்தைகள் தவித்த போது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது இவர்கள்தான். தற்போது இவர்கள் எங்களுடன் வந்து சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இருவரையும் என்னுடைய மூன்றாவது மற்றும் நான்காவது மகள்களாக வளர்ப்பேன். அவர்களுக்கு அம்மாவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த இரண்டு புதிய உறவு.. டி இமானின் முன்னாள் மனைவி போட்ட பதிவு - புகைப்படத்துடன் இதோ.!!

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.