Web Ads

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி .. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

Web Ad 2

ஜிவி பிரகாஷை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர்.

Money fraud by cheating GV Prakash .. Shocking information released.!
Money fraud by cheating GV Prakash .. Shocking information released.!

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பணம் இல்லை இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம் என்றும் அம்மாவின் இறுதி சடங்கு பணம் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைப் பார்த்து ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு உதவ நினைத்து இருபதாயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார் அவர் செய்த உதவியை பதிவு செய்து இருந்து நிலையில் அப்போது தான் அது பழைய செய்தி எனவும் ஜீவி பிரகாஷை ஏமாற்றி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Money fraud by cheating GV Prakash .. Shocking information released.!
Money fraud by cheating GV Prakash .. Shocking information released.!